10 Mooligai Sambrani Powder ( 90 g ) Natural Fragrance, Rs. - 70/-




10கை மூலிகை பொருட்களைக்கொண்டு பரிசுத்தமாக தெய்வீக தன்மையுடன் தயாரிக்கப்பட்ட மூலிகை தூப பொடியில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்கள்:

1. குங்கிலியம்
2. ஜவ்வாது
3. அகில்.
4. சந்தனம்
5. வேம்பு
6. அருகம்புல்
7. வெண்கடுகு
8. சாம்பிராணி
9. நாய்க்கடுகு.
10. மருதாணிவிதை


பயன்கள்

1.ஏவல், பில்லி, சூன்யம் போன்றவை அகலும்.
2.கடன் பிரச்சனைகள் தீரும்.
3.தொழிலில் தடைகள் நீங்கும்.
4.எதிரிகள் தொல்லை நீங்கும்.
5.ஐஸ்வர்யம் அதிகரிக்கும்.
6.அம்மனின் அருள் கிடைக்கும்.
7.லட்சுமி கடாக்ஷம் பெருகுக்கும்.
8.கணபதியின் அருள் கிடைக்கும்.
9.சிவ புண்ணியம் அதிகரிக்கும்.
10.விஷ்ணு புண்ணியம் அதிகரிக்கும்.
11.ராகு, கேது, சாந்தி அடையும்.
12.நவகிரக தோஷம் விலகும்.
13.மருத்துவத்துக்கு அப்பாட்பட்ட நாள் பட்ட பிணிகள் அகலும்.
14.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
15.குழந்தைகளின் நாலுக்கம் குணம் மாறும்.
16.குபேரன் வரவு உண்டாகும்.
17.நல் தேவதைகளின் வரவு உண்டாகும்.

*குறிப்பு - தினமும் பயன்படுத்தினால் மட்டுமே நல்ல மாற்றத்தினை காணமுடியும்*

        முன்னோர் கூறியவை எல்லாம், சுத்த பட்டிக்காட்டுத்தனம் என்று சொல்லி, இன்று பல்வேறு வழிகளில், இயற்கையை விட்டு விலகி, நம் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டோம். இயற்கை சாம்பிராணி எதற்கு என்ற மகத்துவம் அறியாமல், அதை விலக்கி, செயற்கையாக கிடைக்கும், சாம்பிராணி வில்லைகளை வாங்கி, நாமும் சாம்பிராணி புகையை வீடுகளில் போடுகிறோம், என்று நம்மை நாமே, ஏமாற்றிக் கொள்கிறோம்.

        தூபக்கால் எனும் சாம்பிராணி காட்டும் பாத்திரத்தில், மரக்கரிக்கட்டை, தேங்காய் ஓடுகளை எரித்து, அதில் நெருப்பை உண்டாக்கி, அதில் சுத்த சாம்பிராணியை பொடியாக்கி தூவ, வீடுகளில், தெய்வீக நறுமணம் உண்டாகும். இந்த சாம்பிராணி புகையை வீடுகளில் உள்ள பூஜையறையில் காட்டி விட்டு, பின்னர், வீடு முழுவதும், வரவேற்பறை, சமையலறை மற்றும் படுக்கையறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், சாம்பிராணி புகையை காட்டி வருவர்.

        சாம்பிராணி என்பது 'பிரங்கின்சென்ஸ்' (Frankincense) என்ற மரத்திலிருந்து வடியும் பால் அல்லது பிசின். 'பாஸ்வெல்லியா செர்ராட்டா' (Boswellia serrata) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த பிசின், மிக மெதுவாக இறுகி, ஒளிப்புகும் தன்மையும், எளிதில் எரியக்கூடிய தன்மையும் கொண்ட சாம்பிராணியாக மாறுகிறது.

        சாம்பிராணி குமஞ்சம், குங்கிலியம் மரத்துவெள்ளை, பறங்கிச்சாம்பிராணி, வெள்ளைக்கீரை என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. சாம்பிராணியை எரித்தால் நறுமணத்தைப் பரப்பும். சாம்பிராணி மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒடிசா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் அதிகமாக காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் குறிப்பாக சேலம் அருகே உள்ள கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் சாம்பிராணி மரங்கள் காணப்படுகின்றன.

        நவம்பர் மாதம் முதல் ஜூலை வரை இந்த மரங்களிலிருந்து அதிக பால் வடியும். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு, ஒரு மரத்திலிருந்து ஒரு கிலோ வரை சாம்பிராணி பெறப்படுகிறது. இன்று, உலகில் மிகவும் குறைந்துவரும் மரங்களில் ஒன்றாக இருக்கின்றன.

        சாம்பிராணி மரங்களிலிருந்து இரப்பர் பால் போல வடியும் ஒரு பிசினே, வீடுகளில் நாம் உபயோகிக்கும் சாம்பிராணி. இறை வழிபாடுகளில் மத பாகுபாடு கடந்து அனைத்து மதங்களிலும் சாம்பிராணி புகை இடம் பெறுகிறது.

        பழங்காலங்களில், குங்கிலியம் எனும் மரத்தின் பாலே, நம் நாட்டில் சாம்பிராணி போல பயன்படுத்தப்பட்டு வந்தது, குங்கிலிய மரங்கள் இன்றும் நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. அந்த மரங்களின் வேர் மண் கூட, வாசனைமிக்கதாக இருக்கும். இந்த குங்கிலியபுகையே, அக்காலங்களில் அரசர்கள், பெரும்செல்வந்தர்கள் இருப்பிடங்களில், வாசனைப்புகையாகவும், கொடிய நச்சுக்களைப் போக்கக்கூடியவையாகவும் பயன்பட்டன.

        கோயில்களில் தூபக்கால் என்று ஒன்று இருக்கும். இதில், மரக்கரியை எரியச் செய்து, அந்த தணலில் சாம்பிராணியைப் போட்டு, புகைய விட்டு, இறைவன் சந்நிதியில் காட்டுவது வழக்கம். பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாக வெளிப்படும். அதுபோல், நம்முன் பூதாகரமாக, மிகக் கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடன் புகையைப் போன்று லேசாகி விலகிவிடும் என்பது நம்பிக்கை.

        இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சாம்பிராணி தூபம் காட்டப்படுகிறது.

சாம்பிராணி புகை இடுவதால் ஏற்படும் நன்மைகள்.


        வீடுகளில் சாம்பிராணி புகை போடுவதன் மூலம் தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டில் இருந்தாலும் அவை விலகிச்சென்றுவிடும். ஆகவேதான் சில வீடுகளில் மாலை நேரங்களில் சாம்பிராணி தூபம் போடுவார்கள். சுமங்கலிப்பெண்கள், மங்கல நாட்களான செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் குளித்துவிட்டு தெய்வப்படங்களுக்கு விளக்கேற்றி வைத்து, சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள், தரித்திரம் விலகிச்செல்லும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும், செல்வம் பெருகும் என்பார்கள்.

        மழைக்காலங்களில் அல்லது சளி, ஜலதோஷம் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது தலைக்கு குளித்ததும் சாம்பிராணி புகை காட்டுவதை இன்னமும் வழக்கமாக கொண்டுள்ளனர். ஈரத்தலையை உலர வைப்பதற்கு சாம்பிராணி தூபம் உதவிகரமாக இருக்கும். குழந்தைகளை குளிப்பாட்டி சாம்பிராணி புகை காட்டுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஏன், என்ன காரணம்?

        முன்னோர் செயலில் எதற்கும் ஒரு விளக்கம் இருக்கும், பெண்களின் கருப்பை சார்ந்த அனைத்து பாதிப்புகளையும் சரி செய்வதுடன், சாம்பிராணி புகையை சுவாசிக்க, அது உடலில் உள்ள இராஜ உறுப்புகள் அனைத்தையும் எந்த வியாதியும் அணுகாமல், காத்து வரும்.

        மேலும், தலைக்கு சாம்பிராணி புகையை காட்டி வர, தலை முடி கருமையாக வளர்ந்து, நரைகள் இல்லாமல், ஆண்கள் பெண்கள் அனைவரும் நலமுடன் வாழ்ந்தன


நச்சுக்களை அழிக்கும் :

        குங்கிலிய மரங்கள் மற்றும் சாம்பிராணி மரப்பிசின்கள் மூலம், நறுமணமூட்டும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆன்டி செப்டிக் எனும் கிருமிநாசினி தயாரிப்பிலும், இந்த மரங்களின் பிசின்கள் சேர்க்கப்படுகின்றன.

        சாம்பிராணி புகை நச்சுக்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மிக்கது, எனவே, வீடுகளில் நாம் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் சாம்பிராணி புகையிட்டு வர, கிருமிகள் விலகி விடும், வீட்டில் உள்ளவர்களுக்கும் எந்த பாதிப்புகளும் நேராது என்ற எண்ணத்திலேயே, வீடுகளில் சாம்பிராணி புகை இட்டனர்.

        வீடுகளில் வாரமிருமுறை சாம்பிராணி புகையை இட்டு வர, நச்சுக்கள் எல்லாம், விலகி விடும். இப்போது நாம் உபயோகிக்கும் செயற்கை சாம்பிராணிகளால் பலன் ஏதுமில்லை. மாறாக, அவற்றின் செயற்கைத் தன்மை சிலருக்கு ஒவ்வாமையை, உண்டாக்கி விடலாம்.
புற்று நோயை குணப்படுத்தும் இயற்கை சாம்பிராணி :

        தற்போதைய ஆய்வுகளில், குங்கிலிய, சாம்பிராணி மரப் பிசின்களில் உள்ள வேதிப்பொருட்கள், புற்று வியாதிகளை சரியாக்கக்கூடிய, மருத்துவ தன்மை மிக்கவை என ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

        இதையே தானே, நம் முன்னோர் அன்றே கூறி, எண்ணை தேய்த்து குளிக்கும் மனிதர்கள் அனைவருக்கும் மற்றும் வீடுகளில் வாரமிருமுறையும் சாம்பிராணி புகைக்கச் சொல்லி, அறிவுறுத்தி வந்தனர்.     

கொசுக்களை தடுக்க

        மழைக்காலங்களில், வீடுகளில், சாம்பிராணியுடன் வேப்பிலை சருகு, நொச்சி இலை சருகு இவற்றை சேர்த்து, படுக்கை அறைகளில் புகை இட்டு வர, மழைக்கால வியாதிகளைப் பரப்பும் கொசுக்கள் எல்லாம் நொடியில் ஓடி விடும், இரவில் கொசுக்கடி இல்லாத, சுகமான உறக்கத்தை அனுபவிக்கலாம்.

        நமது பொதிகை தற்சார்பு குடிலில் மூலிகை தூப பொடி இப்பொழுது ஆன்லைனில் மற்றும் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.


என்றும் உங்கள் நலனில் மிகுந்த அக்கறையுடன்...

பொதிகை மலை சித்தர் பீடம்.
பொதிகை தற்சார்பு குடில்.

(பொதிகை இயற்கை அங்காடி)

நெ.4, மாரியம்மாள் காம்ப்ளக்ஸ்,
மாரப்பன் வீதி (சந்து ),
செல்வி திருமண மண்டபம் அருகில்,
பொள்ளாச்சி,
கோயம்புத்தூர் - 642001.
தொடர்புக்கு :-
திரு.ராம்குமார் :- +91 88831 51449 (வாட்ஸ் அப்)
திரு.சுகுமார் :- +91 98652 87123 (வாட்ஸ் அப்).
Pollachi.